Developed by - Tamilosai
நிகழ்வுகளின் போது புகைப்படங்கள் எடுக்கும் சந்தர்ப்பத்தில் முகக்கவசத்தை நீக்காமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை நீக்குமாறு கூற வேண்டாம் என புகைப்பட கலைஞர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தியாவசிய தேவை தவிர்ந்து எந்தவொரு காரணத்திற்காகவும் நிகழ்வுகளின் போது முகக்கவசத்தை நீக்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சில நொடிகளுக்காவது முகக்கவசத்தை நீக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.