தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“பிறக்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய வகை நோய்”

0 159

பிறந்து 28 நாட்களை விடக்குறைவான சிசுக்களை தாக்கும் மிஸ்-என் அதாவது புதிதாக பிறந்த குழந்தைகளில் பல்உறுப்பு அழற்சி நோய்  தொடர்பில் கர்ப்பிணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நோய் கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் தாய்மார் கொவிட் தொற்றுக்குள்ளாகும் போது அவர்களின் உடலில் எதிர்ப்பொருள் தோற்றுவிக்கப்பட்டு, அவை தொப்புள்கொடியூடாக வயிற்றிலுள்ள சிசுவுக்குச் செல்வதால் இந்நோய் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் எம்மால் மிஸ்-சி என்று அறியப்பட்ட பல்உறுப்பு அழற்சி நோய் நிலைமையில் காய்ச்சல் பிரதான அறிகுறியாகக் காணப்படும். இந்நோய் சிறுவர்களைப் பாதிக்கக் கூடியதாகும்.

எனினும் மிஸ்-என் அறியப்படும் இந்நோய் பிறந்து 28 நாட்களுக்கும் குறைவான வயதைக் கொண்ட சிசுக்களையே அதிகம் பாதிக்கிறது.

இந்நோயில் காய்ச்சல் அறிகுறியாகத் தென்படாது. எனினும் உடற் தொகுதிகள் பாதிக்கப்படக் கூடிய அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக வயிற்றோட்டம், வாந்திபேதி, சுவாசிப்பதில் சிரமம், உடலில் பழுக்கள் தோன்றுதல், சோர்வு ஏற்படல், தாய் குடிக்காமை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும்.

கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் இதுவரையில் இந்நோயால் பாதிக்கப்பட்ட 4 சிசுக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிக்சையளிக்கப்பட்டு வருகின்றன.

இதே அறிகுறிகளுடன் காசல் வீதி போதனா வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய ஓரிரு வைத்தியசாலைகளிலும் சிசுக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.