Developed by - Tamilosai
பிரேஸிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.
பிரேஸிலின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.