Developed by - Tamilosai
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவிற்கு எதிராகவும் போரில் கலந்து கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்தனர்.
அந்தவகையில், பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நெவார்க்கைச் சேர்ந்த ஐடன் அஸ்லின்(28)Aiden Aslin மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த ஷான் பின்னர்(48)Shaun Pinner இருவரும் உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர்.
ஆனால் இருவரும் ரஷ்ய படைகளிடம் பிடிபட்டு சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், இருவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இரண்டு பிரித்தானிய வீரர்களுக்கும் ரஷ்ய ஆதரவு பெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை அளித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது என ரஷ்யாவின் RIA Novosti செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த தன்னார்வல போர் வீரர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.