Developed by - Tamilosai
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் இன்று சனிக்கிழமை அதிகாரபூர்வமாக இங்கிலாந்து அரசராக அறிவிக்கப்படுகிறார்.
முடிசூடவுள்ள சார்லஸ் இளவரசர் பல அதிரடியான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் மன்னர் எளிமையான முடிசூட்டு விழாவை நடத்தவும் அரண்மனையில் சொகுசு வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார். இந்த முடிவு மக்களால் விரும்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.