Developed by - Tamilosai
இதுவரை பிரித்தானியாவில் 71 இற்கும் அதிகமானோர் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரகள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நோய் அறிகுறிகளை உருவாக்காமல் தடுக்க பெரியம்மை தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலின் எந்தப் பகுதியிலும் அசாதாரண சொறி அல்லது புண்கள் உள்ள எவரும் தேசிய சுகாதார சேவையின் 111 அல்லது உள்ளூர் சுகாதார சேவையைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள பாலியல் சுகாதார ஆலோசகரான வைத்தியர் டேவிட் பிலிப்ஸ், குரங்கு அம்மை தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க தொலைபேசி மூலம் சந்திப்புகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், வழக்கத்திற்கு மாறான சொறி உள்ள அனைவருக்கும் அவர் மீள அழைப்பு விடுத்துள்ளார்.
இதுவரை பாதிக்கப்பட்ட 71 பேரில் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள் என பிரித்தானிய ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) அறிவித்துள்ளது