Developed by - Tamilosai
இன்று இரவு பிரித்தானியாவின் புதிய பிரதமர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இடையே போட்டி நிலவுகிறது.
இதில் வெற்றி பெறுபவரை அரசு அமைக்கும் படி ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி அழைப்பு விடுப்பார். போரிஸ் ஜோன்சன் இராஜினாமாவையடுத்து நாளை புதிய பிரதமர் இங்கிலாந்து அரசுக்கு பொறுப்பு ஏற்பார்.
பதவிக்கு வந்த ஒருவாரத்தில் மின்கட்டணத்தைக் குறைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ள லிஸ் டிரஸ் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.