Developed by - Tamilosai
பிரிட்டனின் மிக நீண்ட காலம் அரசராக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் செப்டம்பர் 9 அன்று காலமானார்.
அவரது உடல் பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது . திங்கட்கிழமை அதிகாலை வரை அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை திங்கட்கிழமை ராணியின் அரசு முறை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வை பிரிட்டன் முழுவதும் உள்ள சுமார் 125 திரையரங்குகளில் திங்கட்கிழமை திரையிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பூங்காக்கள், சதுரங்கள் மற்றும் கதீட்ரல்களில் சடங்கு நிகழ்வுக்களை காட்சிபடுத்த தற்காலிகத் திரைகள் அமைக்கப்படும் என்று அரசாங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.