Developed by - Tamilosai
பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ் இன்று பதவியேற்கிறார். அந்நாட்டில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ஊழல் புகார்கள், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது என பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தற்போது கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் வாக்களித்து புதிய பிரதமராக லிஸ் டிராஸை தேர்வு செய்துள்ளனர்.