Developed by - Tamilosai
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், நேற்று பிரம்மாண்டமாக சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் தனியார் ரிசார்ட்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இவர்களின் திருமணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் வந்திருந்துள்ளனர். இதனிடையே இவர்கள் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொண்டு இருவரும் இன்ப சுற்றுலா செல்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் ஒ2 என்ற படத்தில் நயன்தாரா நடித்து முடித்துள்ளார் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு விக்னேஷ் சிவன் ட்விட்டர் பதிவில், “நயன் மேடம், காதம்பரி, மை தங்கமே, எனது உயிர், எனது கண்மணி இப்போது எனது மனைவியாகிவிட்டாய் ” என்று பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்திற்கு தமிழோசை ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.