தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரபாகரன் தேசிய தலைவர் ஹன்சார்ட்டிலிருந்து நீக்கமுடியாது – வேலுகுமார் எம்பி

0 746

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசிய தலைவர் என தன்னுடைய உரையில் விழித்து பேசினார்.

உடனே தென்னிலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கருத்தினை ஹன்சார்ட்டிலிருந்து நீக்கவேண்டும் என குரல்எழுப்பினார்கள். அந்த நேரத்தில் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் ஹன்சார்ட்டிலிருந்து அதனை நீக்கமுடியாது என்று உடனடியாவே தெளிவாக கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பிய மனோகணேசன் ஒரு முகப்புத்தக பதிவை போட்டுள்ளார்.

https://www.facebook.com/1807807648/videos/3024586574429996/

“கருத்து சுதந்திரம்” என்ற அடிப்படையில், சிங்கள எம்பீக்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் புண்படுத்தலாம்.

ஆனால் ஒரு தமிழ் எம்பி, தான் நம்பும் தனது கருத்தை சபையில் கூற முடியாதா..? என சிங்களத்தில் அரசு தரப்பை பார்த்து கேட்கிறார் சபைக்கு தலைமை தாங்கும் நம்ம எம்பி வேலுகுமார்..!

பாராளுமன்றத்தில், “புலிகளின் தலைவர் பிரபாகரன் மேதகு தேசிய தலைவர்” என்ற தமிழ் பதத்தை, தனது தமிழ் உரையில் பயன்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் எம்பி கஜேந்திரனை விடவும், அதை மறுத்து “புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி, கொலைக்காரன், அட்டூழியக்காரன் (தக்கடியா..!).

ஆகவே கஜேந்திரன் எம்பியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்றுங்கள்” எனக் கூச்சல் எழுப்பி சண்டையிடும் சிங்களராஜாங்க அமைச்சர் சீதா அரம்பல, விமல் வீரவன்ச கட்சியின் “முஸ்லிம் பெயர் தாங்கிய” மொஹமட் முசாம்பில் எம்பி மற்றும் ஏனைய அரசு தரப்பு சிங்கள எம்பீக்களை விடவும், “கஜேந்திரன் எம்பி அவர் கருத்தை கூறுகிறார்.

அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதை நான் எப்படி தடை செய்ய முடியும்? நீங்கள் இதுபற்றி புகார் செய்கிறீர்கள் என்றால், நான் சபாநாயகரிடம் கூறுகிறேன். ஆனால் கஜேந்திரன் எம்பி யின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற நான் இப்போது உத்தரவிட மாட்டேன்.

” என சுத்தமான சிங்களத்தில் மீண்டும், மீண்டும், உரக்க, உரக்க கூறுகின்ற, அந்த சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்குகின்ற, நம்ம தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) கண்டி எம்பி-ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிதலைவர் வேலு குமார்தான் இங்கே “அதிக துணிச்சல்கார பாராட்டுக்குரியவர்” என்பதை இங்கே கவனிக்க தவறாதீர்கள்..!

Leave A Reply

Your email address will not be published.