Developed by - Tamilosai
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனை, நாடாளுமன்றத்தில் தமது தேசிய தலைவர் என்று விளித்தமைக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு இன்று (24) நாடாளுமன்றில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அவரின் உரையை நாடாளுமன்றப் பதிவேடான ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெரும்பான்மை இன உறுப்பினர்கள் நாடாளுமன்றில் வலியுறுத்தினர்.
எனினும் சபைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கின்ற கருத்துரிமையை இல்லாது செய்ய முடியாது என்றும், இந்த விடயத்தை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதாகவும் கூறினார்.