தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரதான இரு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர நுகர்வோர் அதிகாரசபை தீர்மானம்

0 182

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையின் பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சில தினங்களில் வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

அதிகார சபையின் சட்ட ஆலோசனை குழு இது குறித்து  சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெற்றவருவதாக கூறப்படுகின்றது. 

நுகர்வோர் அதிகாரசபையின் நிலைப்பாட்டை அரசாங்கத்திடமும் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

இலங்கையில் விநியோகிக்கும் சமையல் எரிவாயுக்களின் கலப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து கடந்த சில மாதங்களாக நாட்டில் பல்வேறு ஏரியாவு கசிவு மூலமாக வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  

சம்பவங்களுடன் தொடர்புபட்ட இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் கடந்த பத்து நாட்களில் 150 வெடிப்பு சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளன. 

இதனை அடுத்து நுகர்வோர் அதிகாரசபை குறித்த எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.