Developed by - Tamilosai
நேற்று(07) பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Kristalina Georgieva ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொலைபேசி ஊடாக இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்ட குழுவை விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் இதன்போது அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த கடினமான சூழலில், இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விருப்பம் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.