தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிரதமர் வருகை- கலவரபூமியாக மாறிய யாழ்ப்பாணம்

0 448

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக போராட்டத்துக்கு தயாராகியுள்ளனர்.

இதனை அறிந்த பொலிஸார் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு செல்லக் கூடிய பிரதான வீதிகளான மட்டுவில் மற்றும் புத்தூர் சந்தியில் பாதுகாப்பை அதிகரித்து, போராட்டத்துக்கு சென்ற பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன், போராட்டத்துக்கு சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்ட குழுவினரை புத்தூர் சந்திக்கு அண்மையில் மறித்து ,அவர்கள் பயணித்த பேருந்தின் கண்ணாடிகளை மூடி பேருந்துக்குள் சிறை பிடித்துள்ளனர்.

மேலும் மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் போராடத்துக்கு வருகை தந்திருந்த தாய்மாரை பேருந்துடன் நடுவீதியில் மறித்து வைத்துள்ளனர்.

போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில்,பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

இதன் போது தடி அடி நடத்த முற்பட்ட நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன் பின்னர் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களின் தலை முடியில் பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.