தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிணைமுறி மோசடி வழக்கில் ரவி உள்ளிட்ட மூவர் 11 குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிப்பு !

0 99

பிணைமுறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பர்பெச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளா் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 11 பேரின் மீது முன்வைக்கப்பட்டிருந்த 22 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், 11 குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரபன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்பபு தொடர்பில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.