தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பிணப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு?

0 444

பிணப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் மலர்ச்சாலை உரிமையாளர்கள் பெரும் சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பிணம் பெட்டிகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் மலர் சாலை உரிமையாளர்களும், அதேபோல் இறந்த நபர்களின் உறவினர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் பெரல்களில் டீசல் வழங்க மறுப்பதால் மரங்களை அறுக்கும் இயந்திர வாள்களை இயக்கமுடியாதுள்ளதாகவும் இதன் காரணமாக பிண பெட்டிகளை தயாரிக்கும் பலகை வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகும் மலர்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பலகைகளின் தயாரிக்கும் பணப் பெட்டிகள் அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் போதிய பலகை இல்லாத காரணத்தால் பிணப் பெட்டிகளை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மலர் சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.