Developed by - Tamilosai
கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊரெழு கிழக்கு பகுதியிலுள்ள பாழடைந்த அறையொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இவர் இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவராவார்.
சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு மரண விசாரணை அதிகாரி, உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.