Developed by - Tamilosai
அத்தனகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் தர மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் 47 வயதுடைய பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை நாட்களில் குறித்த மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.