தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாரிய ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராகும் ஆசிரியர்கள் – அரசாங்கத்திற்கு நெருக்கடி

0 102

அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எமது அனைத்துப் போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசாங்கம்  புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


https://youtu.be/kZcWSLk80jY

Leave A Reply

Your email address will not be published.