Developed by - Tamilosai
கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு இன்றையதினம் பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் தாங்கிய கொள்கலன் ஒன்று வருகை தந்ததை தொடர்ந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நீண்ட வரிசையில் பியாஜியோ ரக முச்சக்கர வண்டிகளும் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரையில் வேன், லொறி, பேருந்து ஆகிய வாகன சாரதிகள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இருப்பினும் பியாஜியோ ரக முச்சக்கரவண்டி களுக்கான டீசல் 1000 ரூபாவுக்கும் ஏனைய வாகனங்களுக்கான டீசல் 7000 ரூபாவுக்கும் விநியோகிக்கப்படுவதாக எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.