Developed by - Tamilosai
ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஏதேனும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகள் இருக்கின்றதா? அவ்வாறு இருப்பினும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டுள்ள வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இரண்டாவது நாளாகவும் பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சனை எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரட்ண எம்.பி தொடர்பில் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பியை சபாநாயகர் எச்சரித்தார். ஆனால் எச்சரிப்பதை மட்டமே நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.