தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாரதூரமான மோசடிகளில் எமது அரசாங்கம் – கம்மன்பில ஒப்புதல்

0 201

ஊழல் மோசடிகளுக்குப் பெயர் போன ஜே.ஆர். ஜெயவர்த்தன, பிரேமதாஸ, சந்திரிகா மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சிக்காலத்தைக் காட்டிலும் பாரதூரமான மோசடிகளில் எமது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்பதை பெரும் மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிரகாலத் தலைமுறையினர் எம்மை விமர்சிப்பார்கள்.

நாட்டிற்காக அமைச்சுப் பதவிகள் மற்றும் அனைத்தையும் துறக்கத் தயார் என்பதை அமெரிக்காவின் முகவருக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாட்டைப் பாதுகாக்கும் எமது போராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் 11 பிரதான பங்காளிக் கட்சியினர் ஒன்றிணைந்து கொழும்பில் ‘மக்கள் பேரவை’ மாநாட்டை நடத்தினர்.

இதில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.