தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

0 151

கடந்த பருவத்தில் பயிர் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 பில்லியன் ரூபாவை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.