தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாதாள உலகக்குழு உறுப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

0 18

நேற்று மாலை விசேட அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வரும் பாதாள உலகக்குழு உறுப்பினர், போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

மதுருவல ஆராச்சிகே உஷான் சதுரங்க விமலவீர என்ற 31 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பாதாள உலகக்குழு தந்தை என்றழைக்கப்பட்ட சமயன் என்ற அருண உதயந்த 2017 இல் படுகொலை செய்யப்படும் வரை அவருடன் சத்துரங்க விமலவீர உதவியாளராக செயற்பட்டு வந்துள்ளார்.

அதன் பின்னர் அவர் மற்றொரு பிரபல பாதாள உலகக் குற்றவாளியான ‘உரு ஜுவா’ என அழைக்கப்படும் தினேத் மெலன் மாம்புலவுடன் இணைந்திருந்தார்.

2021இல் உரு ஜுவா’வின் மரணத்தைத் தொடர்ந்து சதுரங்க விமல்வீர போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.