Developed by - Tamilosai
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.