Developed by - Tamilosai
பாடலாசிரியர் கபிலன் உடைய மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தூரிகை கபிலன் தனது அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டிலேயே இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சாலி கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.