Developed by - Tamilosai
இன்று (16) காலை முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாடசாலை வளாகத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டு, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.