Developed by - Tamilosai
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்கள் தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளனர் என தெரிவித்தார்.
அதன் பிரகாரம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை தந்துதவ சீனா இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றும் பாடநூல்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசியை கடன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்ளப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.