Developed by - Tamilosai
நாட்டில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இன்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த அனைவருக்கும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நன்றி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் – அதிபர்களுக்கும் நன்றிகள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்து வர ஆர்வமாக உள்ளனர்.
படிப்படியாக அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
சிலர் தவறான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது குறுகிய அரசியல் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.