தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாடசாலைக்குச் செல்லாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அதிபர் – ஆசிரியர்கள் தீர்மானம்

0 107

 எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்குச் சமுகமளிக்க அதிபர்கள் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இருப்பினும், எதிர்வரும் 21  மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்குச் சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் – ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் தொழிற்சங்கங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் அதிபர்கள் – ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்களின் சம்பள நெருக்கடி 2022 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்படும் என இம்மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உறுதியளித்தார்.

எனவே, எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறும் வரவு – செலவுத் திட்ட உரையை முன்னிட்டு தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.