Developed by - Tamilosai
மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்றுறுதியானாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இந்த சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மாணவர் ஒருவர் அல்லது சேவையாளர் அடையாளம் காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான தனி இடம் ஒன்று பாடசாலைகளில் காணப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்து கண்காணித்தல் அவசியமாகும்.
மாணவர் ஒருவர் இவ்வாறு இனங்காணப்பட்டால் உடனடியாக பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார தரப்பினருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.