தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு இடையிலான மோதல் (Video)

0 38

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கட்டினால் த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானதும் மைதானத்தில் பார்வையாளர் அரங்கில் இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக நடந்துகொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் ரசிகர்களை கதிரைகளைக் கொண்டு தாக்குதல் மேற்கொள்வதனை அந்த வீடியோவில் காணக்கூடியதாக உள்ளது.

மோதலுக்கான காரணம்

இந்த போட்டியின் கடைசி ஓவரின் 4ஆவது பந்தில் 6 ஓட்டங்களை விளாசிய ஆசிப் அலி, மாலிக் வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மாலிக் கிண்டலடிக்க, பேட்டை கொண்டு ஆசிப் அலி அடிக்க வந்தார். அங்கிருந்த மற்ற வீரர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்தியதால் ஆசிப் அலி விலகிச் சென்றார். இந்த சம்பவமே ரசிகர்கள் இடையிலான மோதலுக்கு காரணமெனவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.