Developed by - Tamilosai
பாகிஸ்தான் – கராச்சியில் உள்ள இந்து கோவிலுக்குள் நுழைந்த நபர் ஒருவர் ஆலயத்தை சேதப்படுத்தியதற்காக கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கராச்சியின் ராஞ்சோர் லைன் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குள் நுழைந்து இந்து கடவுளான ஜோக் மாயாவின் சிலையை சுத்தியலால் சேதப்படுத்தியதாக பாகிஸ்தானிய உருது மொழி செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் குற்றவாளியை பொதுமக்கள் பிடித்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
ஊடக அறிக்கையின் படி, குற்றம் சாட்டப்பட்டவர் மீது தெய்வ நிந்தனை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இந்த சம்பவத்தை கண்டித்து,
“சிறுபான்மையினருக்கு எதிரான அரசு ஆதரவு பயங்கரவாதம்” என்று கூறினார்.

முன்னதாக அக்டோபர் மாதம், சிந்து மாகாணத்தில் உள்ள ஹனுமான் தேவி மாதா சிலையை அடையாளம் தெரியாத திருடர்கள் இழிவுபடுத்தியுள்ளனர்.
பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.
சமீப காலமாக பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
சிறுபான்மையினரின் நலன்களை காக்கவில்லை என்று சர்வதேச சமூகத்தால் பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.