தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாகிஸ்தானில் இலங்கை பிரஜையைக் கொலை செய்தவர்களிற்கு உச்சபட்ச மரணதண்டனை வழங்க மனோகணேசன் கோரிக்கை

0 72

பாகிஸ்தானில் இலங்கை பிரஜையைக் கொலை செய்தவர்களிற்கு உச்சபட்ச மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மேற்கோளிட்டு இந்தப் பதிவினை இட்டுள்ளார்.

சியால்கோட்டில் இலங்கை நிர்வாக அதிகாரி பிரியந்த குமாரவை அடித்து, எரித்து, கொலை செய்த அடிப்படைவாத கும்பலுக்கு, குறிப்பிட்ட காலவரைக்குள், அதிவேக சட்ட நடவடிக்கை மூலம், உச்சபட்ச மரண தண்டனை வழங்கப்படுவதைத் தவிர எதுவும் எங்களை ஆறுதல் படுத்தாது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.