Developed by - Tamilosai
ரி – 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
போட்டியில் நாணயச் சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணிக்கு 177 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் 14 ஆம் திகதி நியுஸிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.