Developed by - Tamilosai
பஸ் கட்டணத்தில் எஞ்சிய இரண்டு ரூபாவை வழங்காத பஸ் நடத்துநர் மீது பயணியொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய காலி தடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணி காலியிலிருந்து அம்பலாங்கொடை நோக்கிச் செல்லும் இ.போ.ச பஸ்ஸில் காலி பஸ் நிலையத்தில் ஏறி தடல்ல என்ற இடத்துக்கு பஸ் டிக்கெட் தரும்படி கூறி 50 ரூபாவை வழங்கியுள்ளார்.
நடத்துனர் காலியிலிருந்து 23 ரூபா பஸ் டிக்கட்டை வழங்கி மிகுதியாக 25 ரூபாவை வழங்கியுள்ளார். இரண்டு ரூபாய் மிச்சக் காசு இல்லை என நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பஸ் வண்டியின் படியில் நின்ற அந்தப் பயணி நடத்துனரை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டாம் என சக பயணிகள் தெரிவித்ததை அடுத்து அந்த நபர் பஸ் வண்டிக்குள் புகுந்து நடத்துனரை தாக்கிக் காயப்படுத்தி உள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பின்னர் பஸ்சில் இருந்த பயணிகளை வேறொரு பஸ் வண்டியில் ஏற்றிவிட்டு பஸ் வண்டியை பொலிஸ் நிலையத்துக்கு திருப்பிக்கொண்டு வந்து முறைப்பாடு செய்துள்ளனர்