தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஒருவழியா இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்.

0 189

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக இந்தியாவில் நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. வரும் நவம்பர் 17-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 தொடருக்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதி கான்பூரிலும், 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையிலும் துவங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தற்போது பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய அணிக்காக முதல் முறையாக டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பினை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான கே எஸ் பாரத் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கே.எஸ்.பரத் யார் ? என்ற விவரத்தை பற்றி தெரிந்து கொள்ளவே ரசிகர்கள் அதிக ஆவலுடன் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கே.எஸ்.பரத் குறித்த தகவலை நாங்கள் இந்த பதிவு உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான இவர் டொமெஸ்டிக் போட்டிகளில் ஆந்திர அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் கே.எஸ். பரத் ரஞ்சி டிராபி போட்டியில் 300 ரன்களை (முச்சதம்) அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்தியவர். அதுமட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியுடன் ரிசர்வ் வீரராக பயணித்து வருகிறார்.

இதுவரை இவர் நேரடியாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்தது கிடையாது என்றாலும் இந்திய அணியுடன் பல தொடர்களில் அவர் ரிசர்வ் வீரராக பயணித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்ற அவர் 8 போட்டிகளில் விளையாடி 191 ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆவேஷ் கான் ஓவரில் போட்டியின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து பெங்களூர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.