தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

0 120

 அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, ரின் மீன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா  உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கடந்த செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி வௌ்ளை மற்றும் சிகப்பு சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.