தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் நல்லூர் கந்தன்

0 101

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 25ம் திருவிழாவாகிய தீர்த்தத் திருவிழா இன்றையதினம் காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றுள்ளது.

இவ் விசேட பூஜை காலை 6 மணியளவில் ஆரம்பமானதை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

வேதபாராயணங்கள் இன்று காலை ஒலிக்க வசந்த மண்டபத்திலே முருகப்பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வீதியுலா வருகைதந்து தீர்த்தக் கேணியில் தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

தீர்த்தத் திருவிழா

இத் தீர்த்தத் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளதோடு அதனைத் தொடர்ந்து ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மாலை 5 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.