Developed by - Tamilosai
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கொழும்பில் இன்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது,
உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உள்ள அலுமாரிகள் வெறுமையாக உள்ளதாகவும்,
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநியோகம் எரிபொருள் நெருக்கடியால் தடைப்பட்டுள்ளதாகவும்,
மேலும் இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா உரம் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.