Developed by - Tamilosai
பல்கலைக்கழக மாணவர்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதில் அக்கறையற்ற நிலையில் காணப்படுவதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இன்று உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 6 தடுப்பூசிகளில் சீனோபார்மும் உள்ளடங்குகின்றது.
எனவே பல நாடுகளுக்குச் செல்வதற்கான அனுமதி சீனோபார்ம் ஊசி ஏற்றியவர்களுக்கும் உண்டு.
இன்று தடுப்பூசி பெற்றவர்களின் இறப்பு வீதம் குறைவாகவுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குத் தடுப்பூசியைப் பெற ஆர்வம் காட்டவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.