Developed by - Tamilosai
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக் குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
இம்முறை 44,000 மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இணைவதற்காக இம்முறை ஒரு இலட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.