தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல்கலைக்கழக ஆரம்பம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

0 147

 சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இன்று (26-10-2021) முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் பல்கலைக்கழகங்களைத் திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழகக் கட்டடங்கள் கொரோனாத் தொற்றாளர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதய நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த கட்டடங்களை விடுவித்ததன் பின்னர் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.