Developed by - Tamilosai
இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனக்குழுவினர் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனத்தூதரக அதிகாரிகள் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.