Developed by - Tamilosai
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இருந்து காணாமல் போன இலங்கை வீரர்களில் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது.
பர்மிங்காமில் மர்மமான முறையில் காணாமல் போன இலங்கையைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் ஒருவரை இன்னும் காணவில்லை
ஒரு மல்யுத்த வீரர், ஜூடோ நட்சத்திரம் மற்றும் ஜூடோ பயிற்சியாளர் திங்கட்கிழமை முதல் மாயமாகினர் . மூவரும் முன்னதாகவே தங்களது கடவுச்சீட்டை ஒப்படைத்ததால் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியவில்லை.
அவர்கள் காணாமல் போனதை அடுத்து, பர்மிங்காமில் உள்ள இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அதிகாரிகள் தற்போது ஆவணங்களை பெற்றுள்ளனர்.