Developed by - Tamilosai
பருவகால காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பருவக் காய்ச்சல் காரணமாக இலங்கையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்
பேருவளை மற்றும் களுத்துறை ஆகியவை அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 100க்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கஹதுடுவ மற்றும் கலவான பகுதிகளில் இருந்தும் சில கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மாதிரிகள் வந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன்,கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர எல்லைகள், தெஹிவளை, பிலியந்தலை மற்றும் ஹோமாகம ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக மாறியுள்ளன.
வருடந்தோறும் பரவும் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் பருவகால காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர் ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.