Developed by - Tamilosai
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சைகள் கடந்த வருடம் இடம்பெறவிருந்த நிலையில், கொவிட்19 தொற்றினால் பாதிப்படைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை கருத்திற்கொண்டு இந்த வருடத்திற்கு பிற்போடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பரீட்சைகள் தாமதமடைவதால் பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படகூடும்.
எனவே முன்னர் திட்டமிட்டப்படி, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்தப்படும் என்பதுடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா தெரிவித்துள்ளார்.