Developed by - Tamilosai
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தேவையான அளவு உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உர செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உரம் இன்மையால் மரக்கறி உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
உரிய உற்பத்தி இன்மையால் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.