Developed by - Tamilosai
நாளை (2) முதல் காலி – மகும்புர இடையே அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிக்க முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் எனவும், அவற்றை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்தார்.
மேலும் குறித்த முற்கொடுப்பனவு அட்டை வழங்குவது தொடர்பாக வங்கிகளுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகத் தெரிவித்த மிராண்டா, முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் ஓடும் பஸ்களில் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.